9TH New Book TAMIL, இயல் - 6 முழுவதும், இயல் - 6 முழுவதும் Line By Line Question, 9th Tamil Term 6 இயல் 6 , சமச்சீர் கல்வி 6வது தமிழ் புத்தக பதில்கள் தீர்வு, 9th Tamil- 6nd Term, 9th Std Tamil Term 6 Solution, 9th Tamil : Term 6, 9th Tamil : Term 6, 9th Tamil : Term 6, 9th unit 6, 9th Term 6 iyal 6, 9th std unit 6 term 6 tnpsc group exam study material study notes 9th iyal 6
சமச்சீர் கல்வி 9வது தமிழ் வழிகாட்டி புத்தகம் இங்கே TN State Board புதிய பாடத்திட்டம். 9வது TERM 6 - IYAL 6 TAMIL TEST
9th std tamil std 9th standard iyal 7, 9th std samacheer iyal 7
9TH- STD – இயல் - 7
PDF File-யை Download செய்ய கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது
9TH- STD -இயல்-7
1.
பகுத்தறிவு, சுயமரியாதை (தன்மதிப்பு) ஆகியவற்றை மக்களுக்கு அளிக்க அரும்பணியாற்றியவர்- பெரியார்
2.
தந்தை பெரியாரின் சிறப்பு பெயர்கள் - பகுத்தறிவு பகலவன், சுயமரியாதைச்சுடர், தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ், புத்துலகத் தொலை நோக்காளர், பெண்ணினப்போர் முரசு, வெண்தாடி வேந்தர் , வைக்கம் வீரர் , ஈரோட்டுச் சிங்கம்
3.
எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்தை அணுகி ஏன்? எதற்கு? எப்படி என்ற வினாக்களை எழுப்பி அறிவின்வழியே சிந்தித்து முடிவெடுப்பது - பகுத்தறிவு
4.
சாதி என்ற கட்டமைப்பை உடைக்க வேண்டும் என்றவர் - பெரியார்
5.
கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடித்தவர் - பெரியார்
6.
சமூக வளர்ச்சிக்கு எதை மிகச்சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்- கல்வி
7.
'அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத் தரக்கூடாது' என்று கூறியவர் - பெரியார்
8.
"தற்சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும் ” என்று கூறியவர் - பெரியார்
9.
"பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும் " என்று கூறியவர் - பெரியார்
10. பெரியார் பங்கு கொண்ட போராட்டங்கள் - இந்தித்திணிப்பு, தேவதாசி முறை, குலக்கல்வித் திட்டம், கள்ளுண்ணல், குழந்தைத் திருமணம், மணக்கொடை
11. இந்தியாவிலேயே பழமையான மொழி - தமிழ்
12. அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் எந்த மொழியில் படைக்கப்பட வேண்டும் என்று பெரியார் கூறினார் - தமிழில்
13. “மொழியோ நூலோ இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம் பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்'' என்று கூறியவர் - பெரியார்
14. மதிப்புமிக்க நூலாகப் பெரியார் எந்நூலைக் கருதினார்- திருக்குறள்
15. திருக்குறள் நூலை படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள்" என்று பெரியார் கூறினார்?
16. 'மொழி காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும் அவ்வப்பொழுது கண்டுபிடித்து கைக்கொள்ள வேண்டும்' என்று கூறியவர் - பெரியார்
17. பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்ததை தமிழக அரசு எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது - 1978
18. “நாட்டு விடுதலையைவிட, பெண் விடுதலைதான் முதன்மையானது" என்று கூறியவர் - பெரியார்
19. பெரியார் வேலைவாய்ப்பில் எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரவேண்டும் என்றார் - 50
20. ஈ.வெ.ராவுக்குப் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு - நவம்பர் 13, 1938
21. ஈ.வெ.ராவுக்குப் பெரியார்' என்ற பட்டம் எங்கு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் வழங்கப்பட்டது- சென்னை
22. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனஸ்கோ) பெரியாருக்கு 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்" என்ற பட்டத்தை வழங்கிய ஆண்டு - 27.06.1970
23. சுயமரியாதை இயக்கம் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1925
24. பெரியார் நடத்திய இதழ்கள் – குடியரசு,விடுதலை , உண்மை , ரிவோல்ட்
25. பெரியார் நடத்திய ஆங்கில இதழ் - ரிவோல்ட்
26. "தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும்" என்று பெரியாரை பாராட்டியவர் - பாரதிதாசன்
27. "பிறவி இருளைத் துளைத்து சூழலின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி" என்று தொடங்கும் பாடலின் ஆசிரியர்- பிச்சமூர்த்தி
28. “வாழ்க்கைப்போர்","பிறவி இருள்', ஒளியமுது'' என்பதற்கான இலக்கணக்குறிப்பு தருக - உருவகம்
29. "இயற்கையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்'' என்றவர் - வல்லிக்கண்ணன்
30. வல்லிக்கண்ணன் தான் எழுதிய எந்த நூலில் பிச்சமூர்த்தியை பற்றிக் கூறியுள்ளார் - புதுக்கவிதைகளின் தோற்றமும், வளர்ச்சியும்
31. பாரதியாரின் வசனக் கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் - பிச்சமூர்த்தி
32. புதுக்கவிதையின் தந்தை - பிச்சமூர்த்தி
33. புதுக்கவிதையானது என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது - இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக்கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை
34. வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலைய பாதுகாப்புத்துறை அலுவலராகவும் பணியாற்றியவர் - பிச்சமூர்த்தி
35. ந. பிச்சமூர்த்தி எந்தெந்த இதழ்களில் துணை ஆசிரியராக பணியாற்றினார்- அனுமான், நவ இந்தியா
36. ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை - ஸயன்ஸீக்கு பலி
37. ந. பிச்சமூர்த்தி "கலைமகள் இதழின்" பரிசு பெற்ற ஆண்டு - 1932
38. ந.பிச்சமூர்த்தியின் புனைப்பெயர் - பிஷி, ரேவதி
39. "முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி" என்ற பாடலை இயற்றியவர் - ந. பிச்சமூர்த்தி
40. "ஒன்றைப் பிடித்த பிடியை விட்டுப் பிறிதொன்றை எட்டிப்பிடிக்கும் முன்னே ஏற்படும் வெற்றிட அனுபவங்களே வாழ்க்கையின் உருவத்தை வரைந்து வைத்துவிடுகின்றனர் " என்று கூறியவர் - லா வோட்சு
41. உண்டு, இல்லை என்ற சிந்தனைகளுக்கிடையே உண்டு என்பதையே பயனுள்ளதாக கருதுவதுவதை மறுத்தவர் - லாவோட்சு
42. "எந்த ஒன்றும் உருவாக வேண்டுமெனில் உண்டும் வேண்டும் இல்லையும் வேண்டும்" என்ற கருத்தைக் கூறியவர் - லாவோட்சு
43. "ஆரக்கால் முப்பதும் சக்கரத்தின் மையத்தில் இணைகின்றன'' என்ற பாடலின் ஆசிரியர் - லாவோட்சு
44. “வெற்றிடம் இல்லாத குடத்தில் நீரை நிரப்பமுடியாது" என்று கூறியவர் - லாவோட்சு
45. 'இன்மை' என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது யாருடைய கருத்தாகும் - லாவோட்சு
46. “வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களையும் சுவைத்து, நம் வாழ்க்கையைப் பொருளுடையதாக்குவோம்'' என்ற கருத்தை கூறியவர் - லாவோட்சு
47. லாவோட்சு, சீனாவில் எந்த நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்- கி.மு.2
48. லாவோட்சின் சமகாலத்தவர் - கன்பூசியஸ்
49. லாவோட்சு எந்த சிந்தனைப்பிரிவைச் சார்ந்தவர்- தாவோவியம்
50. லா வோட்சின் கவிதையை மொழி பெயர்த்தவர் - சி.மணி
51. இலக்கணக் குறிப்பு தருக "பாண்டம் பாண்டமாக " - அடுக்குத்தொடர்
52. இலக்கணக் குறிப்பு தருக "வாயிலும் சன்னலும்" - எண்ணும்மை
53. "ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - யசோதர காவியம்
54. இலக்கணக்குறிப்பு : "ஆக்குக, போக்குக, நோக்குக, காக்க”- வியங்கோள் வினைமுற்று
55. ஐஞ்சிறுகாப்பியத்தில் இடம்பெற்றுள்ள காப்பியம் - யசோதர காவியம்
56. யசோதர காவியத்தின் ஆசிரியர் - பெயர்தெரியவில்லை
57. யசோதர காவியம் எம்மொழியில் இருந்து தழுவி தமிழில் எழுதப்பெற்றது - வடமொழி
58. யசோதர காவியம் எந்த சமயத்தை சார்ந்தது - சமணம்
59. யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னன் வரலாற்றைக் கூறும் நூல் - யசோதர காவியம்
60. யசோதர காவியம் எத்தனை சருக்கங்களை கொண்டது - 5
61. யசோதர காவியத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 320 அல்லது 330
62. “தம் மக்கள் மெய் தீண்டல் உயிர்க்கு இன்பம்'' என்றவர் - திருவள்ளுவர்
63. கடித வடிவில் இலக்கியங்கள் படைத்தவர்கள் – தாகூர்,டி.கே.சி,மு.வரதராசனார்
64. “வேப்பம் பூ மிதக்கும் எங்கள் வீட்டுக் கிணற்றில்'' என்ற பாடலின் ஆசிரியர் - நா.முத்துக்குமார்
65. "பகை வென்ற வீரனாய் தலைநீர் சொட்டச் சொட்ட'' என்ற பாடலின் ஆசிரியர் - நா.முத்துக்குமார்
66. யாப்பின் உறுப்புகள் எத்தனை - 6
67. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் - மூன்று
68. எழுத்துக்களால் ஆனது - அசை
69. அசை எத்தனை வகைப்படும் - இரண்டு
70. ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் சேர்க்கை - சீர்
71. சீர் எத்தனை வகைப்படும் - 4
72. ஈரசைச் சீர்களுக்கு வேறு பெயர் - இயற்சீர், ஆசிரிய உரிச்சீர்
73. நின்ற சீரின் ஈற்றசையும், அதனையடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல் - தளை எனப்படும்
74. தளை எத்தனை வகைப்படும் - ஏழு
75. காய்முன்நிரை வருவது - கலித்தளை
76. இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது - அடி
77. ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட அடிவகை - கழிநெடிலடி
78. தொடை என்பதன் பொருள் - தொடுத்தல்
79. பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது - தொடை
80. தொடை எத்தனை வகைப்படும் - 8
81. ஒரு பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி அமைவது - மோனைத் தொடை
82. அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி அமைவது- எதுகைத்தொடை
83. அடிகள்தோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ ஒன்றியமைவது - இயைபுத்தொடை
84. மா முன் நேர் வருவது - நேரொன்றாசிரியத்தளை
85. விளம் முன் நிரை வருவது - நிரையொன்றாசிரியத்தளை
86. மா முன் நிரை - விளம் முன் நேர் வருவது - இயற்சீர் வெண்டளை
87. காய் முன் நேர் வருவது - வெண்சீர் வெண்டளை
88. கனி முன் நேர் வருவது - ஒன்றா வஞ்சித்தளை
89. கனி முன் நிரை வருவது - ஒன்றிய வஞ்சித்தளை
90. பெரியார் உயிர் எழுத்துகளில் 'ஐ' என்பதனை 'அய்' எனவும், 'ஔ' என்பதனை 'அவ்' எனவும் சீரமைத்தார்.
91. பெரியார் சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
92. "காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது" இக்குறளின் ஈற்றுச்சீரின் வாய்ப்பாடு - பிறப்பு
93. முண்டி மோதும் துணிவே இன்பம் இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது - துணிவு
94. ஞானம் என்பதன் பொருள் - அறிவு
95. "இருத்தலென்னும் சமுத்திரம், அந்தப் பேரிருளிலிருந்து வந்தது'' என்ற பாடலின் ஆசிரியர் - உமர்கய்யாம்
96. பாரசீகப் புராணங்களில் வரும் புகழ்பெற்ற அரசர் - ஜாம்ஷீத்
97. “திங்கள் முடி சூடுமலை, தென்றல் விளை யாடுமலை " என்ற பாடலின் ஆசிரியர் - குமரகுருபரர்
98. இயைபுத் தொடை என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் - Rhyme
99. "பெரியாரின் சிந்தனைகள் " என்ற நூலின் ஆசிரியர் - வே.ஆனைமுத்து
100. “அஞ்சல் தலைகளின் கதை" என்ற நூலின் ஆசிரியர் - எஸ்.பி.சட்டர்ஜி
101. “அஞ்சல் தலைகளின் கதை" என்ற நூலினை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் - வீ.மு.சாம்பசிவன்
102. “தங்கைக்கு" என்ற நூலின் ஆசிரியர் - மு.வரதராசன்
103. “தம்பிக்கு" என்ற நூலின் ஆசிரியர் - அண்ணா
104. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் - மூன்று வகைப்படும்
105. சீர் எத்தனை வகைப்படும் – நான்கு
106. பொருத்துக.
1. விண் - வானம்
2. ரவி - கதிரவன்
3. கமுகு - பாக்கு
107. பொருத்துக.
1. அறம் - நற்செயல்
2. வெகுளி - சினம்
3. ஞானம் - அறிவு
4. விரதம் - மேற்கொண்ட நன்நெறி
108. பொருத்துக.
1. இரண்டு சீர்கள் - குறளடி
2. மூன்று சீர்கள் - சிந்தடி
3. நான்கு சீர்கள் - அளவடி
4. ஐந்து சீர்கள் - நெடிலடி
109. அசைக்கான வாய்ப்பாடு பொருத்துக.
1. நேர் - நாள்
2. நிரை - மலர்
3. நேர்பு - காசு
4. நிரைபு - பிறப்பு
110. அசைக்கான வாய்ப்பாடு பொருத்துக.
1. நேர் நேர் - தேமா
2. நிரை நேர் - கூவிளம்
3. நிரை நிரை - கருவிளம்
4. நேர் நிரை - கூவிளம்
111. அசைக்கான வாய்ப்பாடு பொருத்துக.
1. நேர் நேர் நேர் - தேமாங்காய்
2. நிரை நேர் நேர் - புளிமாங்காய்
3. நிரை நிரை நேர் - கருவிளங்காய்
4. நேர் நிரை நேர் - கூவிளங்காய்
112. அசைக்கான வாய்ப்பாடு பொருத்துக.
1. நேர் நேர் நிரை - தேமாங்கனி
2. நிரை நேர் நிரை - புளிமாங்கனி
3. நிரை நிரை நிரை - கருவிளங்கனி
4. நேர் நிரை நிரை - கூவிளங்கனி
113. பொருத்துக.
1. எழுத்துச் சீர்திருத்தம் - Reforming the letter
2. எழுத்துரு - Font
3. மெய்யியல் (தத்துவம்) - Philosophy
4. அசை - Syllable
10TH- STD – இயல் - 8
STD 6 STD 7 STD 8 STD 9 STD 10 STD 11 STD 12... இயல் 1,2,3. Link. இயல் 4, 5, 6. Link. இயல் 7, 8, 9
TN 6th Standard Tamil Book Back Answers | Tamil Nadu 7th Std Tamil 3rd Term Book Back Questions with Answers | 7th STD TAMIL - UNIT 2 - மொழியை ஆள்வோம்
7ஆம் வகுப்பு -தமிழ். இரண்டாம் பருவம். வினா விடைகள் மற்றும் கட்டுரைகள். இயல்-1, இயல்-2, இயல்-3 க்கான வினாவிடைகள்
S Seven Academy
TNPSC sALEM
அனைத்து 7-ஆம் வகுப்பு குறிப்புகளையும் பதிவிறக்க Click Here
Tamil Nadu Public Service Commission Mock Test Series in Tamil
Tamil Nadu Public Service Commission
Mock Test Batch
S SEVEN ACADEMY
No 619, 2nd Floor, Near State Bank Colony, Thirugnana Sambandar Road, Five Road, Salem, Tamil Nadu 636005
more