6TH- STD - இயல்-1
Study materials and notes for TNPSC Group 2024 are available in PDF format
6TH- STD - இயல்-1
- இன்பத்தமிழ் - பாடல் ஆசிரியர் - பாரதிதாசன்.
- தமிழுக்கும் அமுதென்றுபேர் பாடல் ஆசிரியர்- பாரதிதாசன்.
- புரட்சிக்கவி என்று அழைக்கப்படுபவர் - பாரதிதாசன்.
- பாவேந்தர் என்று அழைக்கப்படுபவர் - பாரதிதாசன்.
- பாரதிதாசன் இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
- பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை பாரதிதாசன். என்று மாற்றிக் கொண்டவர் - கனக சுப்புரத்தினம்
- தம் கவிதைகளில் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை பாடியுள்ளார்- பாரதிதாசன்
- தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா என்ற பாடல் எழுதியவர் - காசி ஆனந்தன்.
- தமிழ் கும்மி என்னும் பாடலை இயற்றியவர்- பெருஞ்சித்தரனார்.
- கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி பாடலை இயற்றியவர்- பெருஞ்சித்தரனார்.
- பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் - துரை மாணிக்கம்.
- பெருஞ்சித்திரனாரின் சிறப்பு பெயர்- பாவலரேறு.
- பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள்: கனிச்சாறு ,கொய்யாக்கனி ,நூறாசிரியம் , பாவியக்கொத்து.
- பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் : தென்மொழி , தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்
- தமிழின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம்.
- கனிச்சாறு நூலின் ஆசிரியர் – பெருஞ்சித்திரனார்.
- மாணிக்கம் என்பது யாருடைய இயற்பெயர் – பெருஞ்சித்திரனார்.
- தமிழில் மிகப் பழமையான இலக்கண நூல் - தொல்காப்பியம்.
- திணை எத்தனை வகைப்படும் - இரண்டு
- தமிழின் இலக்கண நூல் – தொல்காப்பியம் , நன்னூல்.
- மா- என்னும் சொல்லின் பொருளில் பொருந்தாததை தேர்ந்தெடுக்க - மரம் , துகள் , விலங்கு, நண்டு.
- வீரரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியை பற்றி கூறும் நூல் - பதிற்றுப்பத்து.
- "தமிழ்" என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம் எது – தொல்காப்பியம்.
- பாகற்காய்- பிரித்து எழுதுக - பாகு+ அல் +காய்.
- இஸ்ரோவின் தலைவராக இருந்தவர் - சிவன்.
- கபிலர் என்ற சொல்லின் மாத்திரை அளவு – மூன்றரை.
- "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கியஇதுநீ கருதினை ஆயின்" - என்ற வரி இடம்பெற்றுள்ள சிலப்பதிகாரத்தின் காண்டம் - வஞ்சிக் காண்டம்.
- தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை –
- தேடுபொறி - என்பதற்கிணையான ஆங்கிலச் சொல் - Search engine.
- சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தியைக் கூறும் நூல் – நற்றிணை.
- "சீரிளமை " என்னும் சொல்லை பிரித்து எழுதுக - சீர் + இளமை.
- தொல்காப்பியம் நூலின் ஆசிரியர் யார் – தொல்காப்பியர்.
- தமிழென் கிளவியும் அதனோ ரற்றே - என்று கூறும் நூல் எது – சிலப்பதிகாரம்.
- அஃறிணை - பொருள் தருக - உயர்வு அல்லாத திணை.
- தமிழ்நாடு என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம் – சிலப்பதிகாரம்.
- " யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர் யார் – பாரதியார்.
- உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றும் எழுத்து – உயிர்மெய்.
- செம்பயிர் - என்னும் சொல்லை பிரித்து எழுதுக - செம்மை + பயிர்.
- தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவு அம்மா உனக்கும் எனக்கும் என்று பாடியவர் - காசி ஆனந்தன்.
- கீழ்க்கண்டவற்றுள் வலஞ்சுழி அல்லாத எழுத்து எது - அ,எ, ஒ,ய.
- "என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்!" - என்று பாடியவர் – பாரதியார்.
- பாரதிதாசனின் சிறப்புப் பெயர் – பாவேந்தர்,புரட்சிக்கவி.
- தமிழ்+ எங்கள் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் – தமிழெங்கள்.
- பாரதிதாசன் யாருடைய கவிதைகளின் மீது கொண்ட பற்றால் தம் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார் – பாரதியார்.
- "தமிழன்" என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம் – தேவாரம்.
- பாரதிதாசனின் இயற்பெயர் –சுப்புரத்தினம்.
- தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் அமைந்துள்ளது- வலஞ்சுழி எழுத்துகளாகவே.
- வலஞ்சுழி எழுத்துகள் - அ, எ, ஔ , ண, ஞ.
- இடஞ்சுழி எழுத்துகள் - ட, ய, ழ.
- சிலப்பதிகாரமும், மணிமேகலையும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - இரட்டைக் காப்பியம்.
- பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்.
- பாரதியாரின் இயற்பெயர் - சுப்பிரமணியன்.
- பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் – மாணிக்கம்.
- நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் - தொல்காப்பியம் .
- கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி - கார் நாற்பது.
- நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு – பதிற்றுப்பத்து.
- தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் – திருவள்ளுவமாலை.
- கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர் – நற்றிணை.
- தமிழில் இலக்கணம் எத்தனை வகைப்படும் -
- மெய் என்பது பொருள் - உடம்பு
- தமிழில் உள்ள உயிர் குறில் எழுத்துகள் - ஐந்து
- தமிழில் உள்ள உயிர் நெடில் எழுத்துகள் – ஏழு
- தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை - 216
- உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் - 2
- கால அளவை குறிப்பது - மாத்திரை
- மெய் எழுத்துக்களை ஒலிக்க ஆகும் கால அளவு - 1/2 மாத்திரை
- ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1/2 மாத்திரை
- குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1 மாத்திரை
- நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு -2 மாத்திரை
- வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் என்று கூறியவர் – பாரதியார்.
- "1" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - க
- "2" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - உ
- ''3' என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - ங
- ''4" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - ச
- ''5" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து- ரு
- "6" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - சு
- "7" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - எ
- ''8' என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - அ
- "9" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - கூ
- "10" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - க0
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
9 |
10 |
க |
உ |
ங |
ச |
ரு |
சு |
எ |
அ |
கூ |
க0 |
- பொருத்துக
- ஆழிப்பெருக்கு - கடல் கோள்
- மேதினி - உலகம்
- ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
- உள்ளப்பூட்டு- உள்ளத்தின் அறியாமை
- பொருத்துக
- வலஞ்சுழி - Clock wise
- இடஞ்சுழி - Anti-Clockwise
- இணையம் - Internet
- தேடுபொறி - Search engine
- குரல் தேடல் - Voice search
- பொருத்துக:
- இலக்கண நூல் - தொல்காப்பியம், நன்னூல்
- சங்க இலக்கியம் - எட்டுத்தொகை ,பத்துப்பாட்டு
- அற நூல் - திருக்குறள், நாலடியார்
- காப்பியம் - சிலப்பதிகாரம் ,மணிமேகலை
- பொருத்துக:
- நிருமித்த - உருவாக்கிய
- சமூகம் - மக்கள் குழு
- விளைவு - வளர்ச்சி
- அசதி - சோர்வு
- பொருத்துக:
- கமுகு (பாக்கு) - கூந்தல்
- சப்பாத்திக்கள்ளி - மடல்
- பலா - இலை
- நாணல் - தோகை
- கோரை - புல்
- பொருத்துக:
- விளைவுக்கு - நீர்
- அறிவுக்கு - தோள்
- இளமைக்கு - பால்
- புலவர்க்கு – வேல்